சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போது நாம் எதிர்கொள்ளும் அந்நியச் செலாவணி பிரச்சினை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் எண்ணெய் மற்றும் நிலக்கரி வாங்குவது பற்றி பேசப்பட்டது.
ஆனால், அந்நிய செலாவணி இல்லையென்றால், மற்ற நாடுகளுக்கு எவ்வாறு பணம் செலுத்துவது.
நாட்டில் எரிபொருள் இல்லாதமையால் எதிர்காலத்தில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும். இந்த நிலைமை ஏற்பட்டால், மக்கள் எவ்வாறு நெருக்கடியை எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு திட்டம் இருக்க வேண்டும்.
இந்த நிலைமை தொடர்ந்தால் 2022 மார்ச் மாதத்திற்குள், உணவுப் பற்றாக்குறையுடன் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என அவர் எச்சரித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு இருந்தாலும் மின்தடை இருக்காது! எரிசக்தி அமைச்சர் உறுதி






