கொரோனா; சாவு 27- தொற்று 742

நாட்டில் நேற்றுமுன்தினம் 27 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
உயிரிழந்தவர்களில் 13 பேர் பெண்கள் என்றும், 14 பேர் ஆண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று 742 போ் கொரோனா வைரஸ் தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.

அதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 62 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply