மாத்தளை மாநகர முதல்வர், அதிகாரிகள் மற்றும் சபையின் உறுப்பினர்கள் போன்றோர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு இன்று திங்கட்கிழமை வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள்,ஆணையாளர் மற்றும் மாநகர சபை அதிகாரிகளைச் சந்தித்து மாநகரசபை செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்.நூலகம் மற்றும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய கட்டிடம் என்பவற்றையும் பார்வையிட்டனர்.
இதேவேளை, மாத்தளை மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில், இன்றைய தினம் யாழ் மாநகர சபையை பார்வையிடவுள்ளமையும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.