‘ஓமிக்ரான்’ எனும் கொடிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டுக்குள் ஓமிக்ரான் வைரஸ் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் வழங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி, ஓமிக்ரான் வைரஸை உலக நாடுகள் அறிவதற்கு முன்னர் முதன்முதலாக செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் அனைத்துப் பயணிகளின் உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைகள் ஒரு சிறப்பு செயலியைக் கூட அறிமுகப்படுத்தியுள்ளன என்றார்.
அத்துடன், ஜனாதிபதியும் அரசாங்கமும் இதில் விசேட அக்கறை எடுத்து வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.






