ஹட்டன் உணவகமொன்றில் எரிவாயு வெடிப்பு!

ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

காலை உணவு சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் உணவகம் சேதமடைந்துள்ளது.

முன்னாள் அரசியல் கைதி ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு!

Leave a Reply