யாழ்ப்பாணம், குருநகரில் இரண்டு படகுகளில் 5 பேர் இன்று காலை கடலுக்கு சென்ற நிலையில், படகுகள் இரண்டும் சுழியில் சிக்கி ஆழ்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது. எனினும் மீனவர்கள் ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், குருநகரில் இரண்டு படகுகளில் ஐந்து பேர் இன்று காலை மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் சுழியில் சிக்கி ஆழ்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது.
குறித்த படகில் பயணித்த மீனவர்கள் ஐந்து பேரும் கடற்படையினரால் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் சென்ற இரண்டு படகுகளும் கடலில் மூழ்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.






