புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிராம்பியடி செம்மாந்தளுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 350 மில்லி கிராம் ஹெரோயின், 140 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து அளவுகளைக் கொண்ட வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ். மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநருக்கு கடிதம்!

Leave a Reply