தமக்கான 10,000 ரூபா சம்பளத்தை அதிகரிக்கக் கோரி இன்று புத்தளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
அபிவிருத்திக்காகவும், எதிர்கால வேலைத்திடங்களுக்கு இந்த அரச ஊழியர்கள் பங்களிப்பு இல்லாமல் இந்த நாட்டில் சிறு துளியும் நகறாது.
நாட்டில் விலைவாசிகள் அதிகரித்துகொண்டே இருக்கின்றது. நாட்டில் கடன் சுமை அதிகரித்து கொண்டு செல்லும்போது, வீட்டிலும் கடன் சுமை அதிகரித்துச் செல்கிறது.
குறித்த ஆர்ப்பாட்டம் செய்வதற்கான காரணம் எங்களுடைய வீட்டில் ஏற்பட்டுள்ள வருமை. எங்களுடைய வாழ்வாதார தேவைக்கான வசதியுமில்லை.
நாட்டில் பொருளாதாரம் சீர் குலைந்து காணப்படுகிறது. ஆகவே, உடனடியாக 10.000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறும் நாட்டிற்காக உழைக்கின்ற எங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








