அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது – ஜி.எல்.பீரிஸ்

அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்  என   நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபையால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “உரிய திகதி ஒன்றைத் தீர்மானிக்காது சட்டவிரோத காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம்” –  என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply