மழை தொடர்ச்சியாக பெய்தால் இரணைமடுக்குளம் வான்பாயும்!

தற்போது நிலவும் தொடர் மழையால், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 நீர்பாசனக் குளங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளன. 36 அடி அடைவு மட்டம் கொண்ட இரணைமடுக்குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவானால் இரணைமடுக்குளம் வான்பாயலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவு மட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
அதேவேளை 26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடுக் குளம் அடைவுமட்டத்த அடைந்து 1 அங்குலமாகவும், 19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் அடைவுமட்டத்த அடைந்து 3 அங்குலமாகவும், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் அடைவுமட்டத்த அடைந்து 7 அங்குலமாகவும், 10 அடி ஆறு அங்குலம் கொள்ளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலமாகவும், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவு மட்டத்தை அடைந்து 4 அங்குலமாகவும், 8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் அடைவுமட்டத்தை அடைந்தும் வான் பாய ஆரம்பித்துள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே நீர் நிலைகள் மற்றும் நீர் வடிந்தோடும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.

Leave a Reply