நாட்டில் மேலும் 541 பேருக்கு தொற்று: 23 பேர் பலி:!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,328 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 541 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,061 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,040 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.தே.க.வில் இருந்து விலகினார் அர்ஜூன ரணதுங்க!

Leave a Reply