அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று திருகோணமலை புனிதமரியாள் கல்லூரியில் இடம் பெற்றது.
அகில இலங்கை அபிவிருத்தி சங்கம் ,பொருளாதார அபிருத்தி சங்கமும் இணைந்து நடத்தப்பட்ட இக்கலந்துரையாடலில், திருகோணலை மாவட்ட செயலகம், பிரதேசசெயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இச் சங்கத்தின் நோக்கம் தொடர்பான விளக்கத்தினை அபிவிருத்தி சங்க தலைவரும் அகில இலங்கை சங்க செயலாளருமான அனுராத செனவிரத்ன தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் அகில இலங்கை அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பஸ்நாயக்க, பொருளாதார அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்மிக்க ராஜபக்ச, களுத்துரை மாவட்ட இணைப்பாளர் பிரனாந்து ஆகியோர் கலந்துகொண்டர்.
இதன் போது, திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி சங்கம் தெரிவுசெய்யப்பட்டு,ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர் என தெரிவு செய்யப்பட்டனர்..
அதன்படி, மாவட்ட பொருளாதார அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக பரமேஸ்வரன் லோஜினி, பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திலும் செயலாளராக பி .அஜிமல்காண் கந்தளாய் பிரதேச செயலகத்திலும் பொருளாளராக எச். தயாழினி, மொறவேவ பிரதேச செயலக மாவட்ட ஒருங்கிணைப்பாளரா எம். யூசுப் பௌமி, கோம்மறங்கடவெல பிரதேச செயலக உப தலைவர் W.M.N. வாசல, பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், உப செயலாளர் வி.தங்கரூபன் ஆகியோர் தம்பலகாமம் பிரதேச செயல்கத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.






