எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வுக்காக நிபுணர் குழு நியமிப்பு!

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகின்ற நிலையில் அது குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட 12 பரிசோதனை அறிக்கைகள் மேலதிக ஆய்வுகளுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையினால் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 12 எரிவாயு கொள்கலன்கள் மாதிரியாக பெறப்பட்டிருந்தது.

குறித்த எரிவாயு கொள்கலன்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட அறிக்கை மேலதிக ஆய்வுகளுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயற்பாட்டு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரிவின் பிரதானி பேராசிரியர் சாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார்.

பணத்தை திருடிய இருவரைக் கைது செய்ய மக்களின் உதவியை நாடியுள்ள யாழ்ப்பாண பொலிஸார்!

Leave a Reply