நாட்டு மக்கள் உணவிற்காகக் கஸ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என நினைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் உணவிற்காகக் கஸ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என நினைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று மொனராகலையில் இருந்து இரண்டு இளைஞர்கள் என்னைச் சந்திப்பதற்காக வந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார்கள். நேற்று காலை உணவிற்காக அவர்கள் கொழும்பில் உணவகமொன்றிற்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் பாண் கால் இறாத்தலும் பருப்பு கலவை கறியும் வாங்கியுள்ளார்கள்.
அந்த கறியில் மேலாக இருந்த சிறிய மீன் துண்டையும் இவர்கள் சாப்பிட்டுள்ளார்கள். இறுதியில் அவர்களிடம் அந்த காலைவேளை உணவுக்காக 350 ரூபாய் அறவிடப்பட்டதாக, அவர்கள் கவலைத் தெரிவித்தனர்.
இதுதான் இன்று வாழ்க்கைச் செலவு. இந்த நாட்டில் பாண் உள்ளிட்ட சிற்றுண்டிகள் என அனைத்தினதும் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் கொள்ளையடிப்பது இன்னமும் நிறுத்தப்படவில்லை.
நாட்டு மக்கள் உணவிற்காகக் கஸ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என நினைக்கின்றது.
அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கின்றோம். நீங்கள் வெளியில் வந்து கதைத்து பிரயோசனமில்லை. கம்மன்பில போன்றவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டு பேசுபவர், ஆனால் அமைச்சரவையில் இதை பற்றிப் பேசமாட்டார். மிகவும் கவலைக்குரிய விடயம்.
வலுசக்தியை நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டு எரிவாயுவை முறையாக வழங்குங்கள். எரிபொருளைக் குறைந்த விலையில் வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனா!






