நாட்டில் பாலியல் தொழில்துறையின் நிலைமை என்ன?

பொருளாதார நெருக்கடிகளிற்கு மத்தியில் நாட்டில் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்ற நிலையில் பாலியல் தொழில்துறையும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்காகவும் தங்கள் குடும்பங்களை பராமரிப்பதற்காகவும் சில ஆண்களும் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள டெய்லிமிரர் இதுவே அவர்களிற்கான நிரந்தர வருமானத்திற்கான வழிமுறையாக காணப்படுகின்றது.

பழைய கட்டணங்களால் குடும்பங்களிற்கு உணவளிக்க முடியாது என்பதால் புதிய கட்டணங்களை அறவிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

ஆகக்குறைந்தளவு 7500 ரூபாயை அறவிடுகின்றனர் என தெரிவித்துள்ள டெய்லி இதில் குறிப்பிட்ட அறைக்கான ஏனைய சேவைகளிற்கான கட்டணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு இரவிற்கு ஐம்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலும் அறவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ள டெய்லி மிரர் இது வழங்கப்படும் சேவைகள் குறிப்பிட்ட ஆண்கள் பெண்களை பொறுத்தவிடயம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆண்கள் பெண்களின் இது தொடர்பான விளம்பரங்களை சில இணையத்தளங்கள் வெளியிட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியின் பின்னர் தங்களிற்கான விளம்பரம் அதிகரித்துள்ளதாக இந்த இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு மணித்தியாலத்திற்கு 20க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் கிடைக்கின்றன. புதிய நபர்கள் உள்ளனர் என அந்த தளங்கள் தகவல்களை வெளியிட்ட வண்ணமுள்ளன.

கொழும்பிற்கு வெளியே-ஏனைய மாகாணங்களில் இந்த சேவைகள் உள்ளதை சில விளம்பரங்கள் மூலம் அறிய முடிகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply