மாதகல் கடலில் இன்று அத்துமீறி உள்நுழைந்த இந்திய படகுகள்!

இந்திய இழுவைப் படகுகள் இன்றையதினமும் மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்ததை காணக்கூடியதாக இருந்தது என மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தாம் உடனடியாக மாதகல் கடற்படை பகுதியின் கட்டளைத்தளபதிக்கு அறிவித்ததாகவும், அவர்கள் தமது கடற்படை படகு கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அவர்களை கொண்டு விரட்டுவதற்கும் இயலுமாயின் கைது செய்வதற்குமான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கடற்றொழில் சங்கத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply