விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலிடம், சிவபூமி மனவிருத்தி பாடசாலை!

தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தை கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த வெற்றிக்கான விருதினை கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை பெறற்றுக் கொண்டது.

இந்த வகையில் வெற்றியைக் கௌரவிக்கும் விஷேட நிகழ்வு ஒன்று பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன், சிவபூமி பாடசாலை அதிபர் கலைவாணி குகதாஸன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள், நல்லூர் பிரதேச செயலர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply