கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
கிண்ணியா – ´குறிஞ்சாக்கேணி´ படகு விபத்தில் 6 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
அதன்படி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23.11.2021 அன்று காலை இந்த படகு விபத்து சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






