முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

முன்னாள் அமைச்சர் சிறிசேனா குரே, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை காலமானார்.

1979ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரையான காலம் வரை, சிறிசேன குரே கொழும்பு மேயராக கடமையாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பாராளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக சிறிசேன குரே பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply