ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர், நிந்தவூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில் வைத்து பெண் உட்பட மூவர் 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான மூவரும் நிந்தவூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சுமார் 51,27,18 வயதினை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர்களுடன் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சம்மாந்துறை பொலிசார் எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் கைது செய்யப்பட்ட நபர்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply