மாதகலில் கொட்டான்களுடன் மக்களை அச்சுறுத்தும் கடற்படையினர்!

யாழ்ப்பாணம் – மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடியுள்ளனர்.

இதன்போது, கொட்டான்களுடன் வந்த கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply