பொத்துஹெர பகுதியில் விபத்து- குழந்தை உயிரிழப்பு

<!–

பொத்துஹெர பகுதியில் விபத்து- குழந்தை உயிரிழப்பு – Athavan News

கொழும்பு – குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவரின் கைகளில் இருந்த குழந்தையே படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Leave a Reply