வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. உப அலுவலக முன்றலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐந்து வருடங்களாக குறித்த போராட்டம் தொடர்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதமும் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாதகலில் கொட்டான்களுடன் மக்களை அச்சுறுத்தும் கடற்படையினர்!

Leave a Reply