பெரிய பரந்தனில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு போராட்டம்

பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில், எதிர்ப்பு போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில், 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக இப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலை ஒன்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கிராம மட்ட அமைப்புகளின் பங்கு பற்றுதல் இன்றி, அதாவது கிராம அபிவிருத்திச் சங்கம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாடசாலை சமூகம் கிராம மட்ட அமைப்புகளின் எந்த பங்குதலுமின்றி குறித்த கவனயீர்ப்பு இடம்பெறுள்ளது.

இந்த மதுபான சாலை அமைக்க உள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட அதிக குடும்பங்கள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலரின் பங்குபற்றுதலுடன் ஒரு அரசியல் தலையீட்டின் காரணமாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply