மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கிகாரம்

உள்ளூர் சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசானைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும் பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ், இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெற்றிக்தொன் அரிசியை, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்கன் டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும்! வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினி

Leave a Reply