தம்பலகாமத்தில் இடம்பெற்ற மனித ஆட்கடத்தல் தொடர்பிலான குற்றங்கள் பற்றிய செயலமர்வு

மனித ஆட்கடத்தல் மனித வியாபாரம் தொடர்பிலான குற்றங்கள் பற்றிய செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை இச் செயலமர்வு இடம் பெற்றது.

இச் செயலமர்வில், புலம் பெயர்தல் ஊடான சட்ட ரீதியற்ற முறையில் வெளிநாடுகளுக்கு கடல் மூலமாக செல்வதனால் ஏற்படும் பாதக விளைவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இதற்கான அனுசரனையை வழங்கியுள்ளது சட்ட விரோதமான முறையில் கடல் வழி மூலமாக வெளிநாடுகளுக்கு செல்வதனால் இலங்கை நாட்டு சட்டத்தினால் வழங்கப்படும் தண்டனை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் பெண்கள்,இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு வளவாளராக சேருவில பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.அருணா கலந்து கொண்டு பயிற்சியை முன்னெடுத்துச் சென்றார்.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அஸ்பீர்,டில்சாத் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply