
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் நினைவஞ்சலி நிகழ்வும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
சதானந்தனின் பாரியார் நினைவுச் சுடரை ஏற்றி வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், கட்சி உறுப்பினர்கள், சதானந்தனின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.





