பொலிஸ் நிலையத்தில் பணப்பையை திருடி சென்ற குரங்கு

பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கொன்று எடுத்துச் சென்றுள்ளது.

பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வந்த போதேஇ குறித்த நபர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் பணப்பையை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

பகமுன நகரை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply