<!–
மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) எட்டியதுடன், அது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக பதவியேற்பதற்காக மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






