கேகாலை, ருவன்வெல்ல – கொட்டியாக்கும்புர பிரதேசத்தில் கட்டடமொன்றில் நடத்தி செல்லப்பட்ட டயர் விற்பனை நிலையத்தில் இன்று பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
ருவன்வெல்ல பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீப்பரவலில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எனினும் டயர் விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் விற்பனை நிலையத்திலிருந்த டயர்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






