மாவீரர்களுக்கு நினைவு கூறுவதற்கு நீதிமன்றம் தடைவிதிக்காத போதும் இராணுவம் மற்றும் பொலிசார் நினைவு கூறுயவர்களை அச்சுறுத்தி தடை செய்ய முற்பட்டமைக்கும் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி ஊடகவியலாளாளர் விஸ்வலிங்கம் விஸ்வா கொடுமையான முறையில் தாக்கப்பட்டமைக்கும் எதிராக யாழ் மாநகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் ஜெயகுமார் ராஜீவ்காந்தால் முன்மொழியப்பட்டு சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.






