வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் இரு வான் கதவுகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த வாரம் பெய்து வந்த கனமழையானது குறைவடைந்துள்ள போதும், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனாலும், தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து வருவதனாலும் பாவற்குளத்திற்கான நீர்வரத்து மீள அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் அரை அடி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய இரு வான் கதவுகளும் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் இரவு வேளை திறக்கப்படும்.
குளத்தின் நீர் கொள்ளளவை பேணும் வகையில் குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக உள்ளது.
எனினும் நீர் வழிந்தோடும் பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


![IMG_E3420[1] (1)](https://storage.googleapis.com/samugammedia-storage/2021/11/52735dd5-img_e34201-1.jpg)



