கல்லடி பகுதியில் மின்சார வேலியில் சிக்குண்டு யானை பலி!

புத்தளம் கல்லடி சிங்ஹபுர பகுதியில் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான காணியில் யானை ஒன்று உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

மின்சார வேலியில் சிக்குண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே குறித்த யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையின் தெரியவந்துள்ளது.

யானை உயிரிழந்த வீட்டில் மின் துண்டிக்கப்பட்டமையால் தனது சகோதரனின் வீட்டிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று யானைவேலிகளை அமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வீட்டின் உரிமையாளரை கைது செய்து புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமையன்று மின்சார வேலியில் சிக்குண்டு இரண்டு தந்தங்களுடைய யானையைப் புதைத்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்தே மின்சாரத்தை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பாவற்குளத்தில் மீண்டும் இரு வான் கதவுகள் திறப்பு!

Leave a Reply