தண்டவாளத்திற்கு அருகிலுள்ள பாலத்தை அகலமாக்கக்குமாறு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் தண்டவாளத்திற்கு அருகில் காணப்படும் பாலத்தை உடைத்து அகலமாக்குமாறு கோரி இன்று தண்டவாளத்தை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் நகரின் கடையாக்குளம், மற்றும் நூர்நகர் ஆகிய தாழ்நிலப் பகுதிகள் சிறிய மழைக்கு தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றமையால், அப்பகுதியிலுள்ள வெள்ள நீர் வெளியேறுவதற்கு தாமதமாகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

தண்டவாளத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அருவைக்காட்டிலிருந்து பாலாவி சிமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணக்கற்களை ஏற்றிச் செல்லும் ரயில் அப்பகுதியில் ஸ்தம்பிதம் அடைந்தது.

இதன்போது, புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply