இலங்கை – தென்னாபிரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க் இக்கூட்டத்தில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த் குமார், வீரசுமன வீரசிங்ஹ மற்றும் மர்ஜான் பலீல் ஆகியோர் இந்நட்புறவு சங்கத்தின் பிரதித் தலைவர்களாகவும், சரித ஹேரத் செயலாளராகவும், எஸ்.எம்.எம்.முசாரப் உதவிச் செயலாளராகவும், இசாக் ரஹ்மான் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை – தென்னாபிரிக்கா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவும் நல்லுறவை மேலும் மேம்படுத்தும் என இங்கு உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்தார்.







