மைத்திரிக்கு மட்டுமே புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டன! பொலிஸ் மா அதிபர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மட்டுமே புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்தபோது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் சில முக்கியமான புலனாய்வுத் தகவல்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும், அரச புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரிக்கும் இடையில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலளார், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படையின் தளபதிகள் ஆகியோருக்கு புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பத்தனை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடித்தது எரிவாவு சிலிண்டர்

Leave a Reply