
பாண்டிருப்பு முருகன் ஆலயத்தால் பஞ்சாங்க கலண்டர் வெளியீடு!

பாண்டிருப்பு ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தால் 2022ம் ஆண்டிற்கான வாக்கிய பஞ்சாங்க கலண்டர் நேற்று வெளியீட்டு வைக்கப்பட்டது.
ஆலய பிரதம குரு சிவ ஶ்ரீ நல்லராசா குருக்கல் மற்றும் உப தலைவர் இரா.திவாகரன் தலைமையில் செயலாளர் .க. சிவாக்குட்டி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலையில் முதாவது கலண்டர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரியிடம் வழங்கி வைக்கப்பட்டது.





