ஜேர்மன் தூதுவர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு விஜயம்!

ஜேர்மன் மொழிக்கான பாடசாலைகளின் இணையம் இணைந்து வடமாகாணத்தில் ஜேர்மன் மொழி கற்பிக்கப்படும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் விஜயம் மேற்கொண்டார்.

கல்லூரி நிர்வாகம் அவரை வரவேற்று கல்லூரியில் ஜேர்மன் மொழி கற்கும் மாணவர்களுடனான சந்திப்பொன்றையும் நிகழ்த்தினர்.

இதன்போது, மாணவர்கள் ஜேர்மன் மொழியிலான பாடல்களையும் உரைகளையும் நிகழ்த்தியதோடு தமிழ் கலாசார நடனங்களையும் ஆற்றுகைப்படுத்தினர்.

தூதுவர் தமது உரையில் 2023ஆம் ஆண்டு ஜேர்மன் – இலங்கை இடையிலான நட்புறவின் 70 ஆம் ஆண்டு நிறைவு செயற்பாடுகளுக்கு சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஒத்தாசையை நாடி நின்றதோடு கடந்த 10 ஆண்டுகளாக இக் கல்லூரி ஜேர்மன் மொழி, கலாசார, பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கு வழங்கி வரும் ஊக்கத்திற்கு நன்றி கூறி சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பையும் வாழ்த்தி நின்றார்.

Leave a Reply