எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு: நாளை அவசர ஆலோசனை உப குழுக் கூட்டம்!

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை உப குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதற்கான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு தொடர்பில் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் லசந்த அழகியவன்ன பதிலளித்த நிலையில், எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவசர ஆலோசனை உப குழுக் கூட்டத்தைக் கூட்டலாம் என்ற யோசனை சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்தே எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை உப குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் அறிவித்ததுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது தொடர்பில் அவசர ஆலோசனை உப தெரிவுக்கு செயற்குழு ஒன்றையும் அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

தேசிய சுகாதார முறைமைக்குள் பெருந்தோட்ட மக்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை? சபையில் வேலுகுமார் எம்.பி. கவலை

Leave a Reply