கடும் மழையால் பாதிக்கப்பட்ட அல்வாய் வடக்கு கிராம மக்களுக்கு, யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடும் மழையால் பாதிக்கப்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா வீதியிலுள்ள 40 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் பெறுமதியான உலர் உணவு பொருட்களும், தற்காலிக ஓலை குடிசையில் வசித்துக் கொண்டிருந்த 15 குடும்பங்களுக்கு தரப்பாளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், தற்காலிக வீடுகள் சிலவற்றிற்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, தரப்பாள்களையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் கிராம சேவகர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.










