
Today Rasi Palan 01th December 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள்.
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
கடகம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள் வெற்றி பெறும் நாள்.
2022 Rasi Palan in Tamil : 2022 ஆம் ஆண்டு உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி: குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. மாற்றங்கள் ஏற்படும் நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். லட்சியத்தை அடையும் நாள்.
மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





