திருமண வைபவங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

<!–

திருமண வைபவங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் – Athavan News

திருமண வைபவங்கள் நடைபெறும் மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகாமல், அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ள முடியுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75 வீதப் பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில்முறை மற்றும் அலுவலகம் சந்திப்புகளில் 150 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply