யாழ். மாநகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தோற்கடிக்க திட்டம்!

யாழ். மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தோற்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பதற்காக மாநகர சபையில் அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்குரிய பாதீடு டிசெம்பர் 15ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பாதீடு தோற்கடிக்கப்படுமாயின், முதல்வரின் பதவி பறிபோகும் நிலையில், கூட்டமைப்பின் சார்பில் மாநகர முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் முதல்வராக பதவியேற்றதில் இருந்து யாழ்ப்பாண நகரப் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதோடு, மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

யாழ் மாநகர சபையில் அங்கத்துவம் பெறும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாநகர முதல்வருக்கு எதிராக செயற்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை!

Leave a Reply