வெளிநாட்டுக்குச் பறந்து சென்று ஆறு மாதங்களின் பின்னர் நாடு திரும்பிய பறவை!

இலங்கைக்கு உரித்தான ‘மெனிகே’ பறவை 19,360 கி.மீ. பயணத்தின் பின்னர் நாடு திரும்பியுள்ளது.

புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கி பயணித்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளது.

‘மெனிகே’ என்று பெயரிடப்பட்டுள்ள Heuglin’s gull என்ற இந்த பறவை, கடந்த ஏப்ரல் மாதம் தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.

தலைமன்னாரிலிருந்து ஜீ.பி.எஸ் பொருத்தப்பட்ட ‘மேக’ மற்றும் ‘மெனிக்கே’ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு Heuglin’s gull இன பறவைகள் விடுவிக்கப்பட்டன.

இலங்கையை விட்டு வெளியேறி பறவை ஆறு மாதங்கள், ஒன்பது நாட்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 4 ஆம் திகதி மன்னாருக்குத் திரும்பியது.

தெற்கு திசை நோக்கி இடம்பெயரும் இன்னொரு பறவை ‘மேக’ இறுதி கட்டத்தில் இருக்கிறது, அது விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னாரில் ‘ஒமிக்ரான்’ திரிவு வைரஸ் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை!

[embedded content]

Leave a Reply