தமிழ் சினிமாவில் 1987 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் எங்க ஊரு பாட்டுக்காரன்.
இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை சாந்திப்பிரியா. நடிகை பானுப்ரியாவின் தங்கச்சியான இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதிலும் குறிப்பாக இவரது கண் அழகிற்கென்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. சித்தார்த் ரே என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமான ஒரே வருடத்தில் இவருடைய கணவன் இறந்துவிட்டார்.
இதனையடுத்து தனியாளாக தன்னுடைய மகன்களை வளர்த்த சாந்தி தற்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





