<!–
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.
வட்டுக்கோட்டை- காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. ஆனாலும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையிலுள்ள வீடொன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





