மாதகல் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் கச்சேரி ஆளுநர் செயலகம் முன்பாக மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
‘எமது நிலமே எமக்கு வேண்டும், கடற்படையே வெளியேறு, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகதே’ எனக் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கில் தனியார் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், அந்தக் காணிகளை படைப்படையினருக்குப் பெற்றுக் கொடுப்பதில் வடக்கு ஆளுநர் மும்முரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, கடற்படையினருக்கு காணி அளக்க முற்பட்டவேளை தடுத்தி நிறுத்தியமையால் உரிமையாளர்களை தனியாக இன்று அழைத்து ஒப்புதல் பெறுவதற்கு வடக்கு ஆளுநர் முயற்சி செய்துள்ளார்.
இதுவரை அளவீடு செய்ய முற்பட்ட சமயம் தடுத்து நிறுத்தப்பட்ட 4 கடற்படை முகாம்களில் இனங்காணப்பட்ட 16 காணி உரிமையாளர்களையும் இன்று 2 மணிக்கு தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஆளுநர் இழப்பீட்டுடன் அந்த நிலங்களை விடுவிக்க சம்மதம் கோரும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலைமை காணப்பட்டால் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி அன்றி இரகசியமாக மேற்கொள்ளவே திட்டமிடப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

https://www.facebook.com/Livesamugam/videos/623477665523941/?sfnsn=mo






