இலங்கையில் 3ஆவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் மூன்றாவது  கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி, மூன்றாவது கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 56 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு  குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 32 ஆயிரத்து 188 பேர், கொரோனா முதலாவது தடுப்பூசிகளையும் ஒரு கோடியே 37 இலட்சத்து 49 ஆயிரத்து 891 பேர் இரண்டாவது தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 3 பேருக்கு  கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 65 ஆயிரத்து 285 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு  கூறியுள்ளது.

இதேவேளை 851 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும் 956 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் ஆயிரத்து 327 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் மூவாயிரத்து 578 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும்  தொற்று நோய் விஞ்ஞான பிரிவு  மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply