பெற்றோலிய ஆய்வகத்தின் எரிவாயுவின் தரம் தொடர்பான சோதனைகள் வெற்றியளிக்காது என லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு உரிய எரிவாயுவை கொள்வனவு செய்ய கட்டளையை பிறப்பிக்கும் போதே எரிவாயுவின் கலவை அறிவிக்கப்படுவதால், வாயுவின் கலவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என லாப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதி தலைவரான திலக் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள எந்தவொரு அரசாங்க ஆய்வகத்திலும் தேவையான வசதிகள் இல்லாததால் இந்த கலவையை சோதிக்க முடியாது, இருப்பினும் இலங்கையிலுள்ள இரு வெளிநாட்டு ஆய்வகங்களால் மாத்திரமே இதனை செய்ய முடியும்.
இலங்கை பெற்றோலிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தவறானவை , அரச ஆய்வகங்கள் ஒரு தொட்டியில் இருந்து மாத்திரமே எரிவாயுவை எடுத்து சோதனை செய்கின்றன என அவர் தெரிவித்தார்.
இது உண்மையில் சரியான சோதனை அல்ல, கப்பலில் இருந்து வரும் வாயு, சோதனை ஏற்கத்தக்கதாக இருக்க சிலிண்டரின் மேல், நடு மற்றும் கீழ் பகுதியில் இருந்து சோதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.






