<!–
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுவதில் வவுனியா மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, வவுனியா- கந்தபுரம் வாணி வித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமாகிய தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் மாலை வரை நடைபெறுமென அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தடுப்பூசியினை செலுத்தி செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் 1500 தடுப்பூசிகளின் முதல்டோஸ் பொதுமக்களிற்கு செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


